Our Event
திருவண்ணாமலையில் இலவச தையல் பயிற்சி முகாம் வெற்றிகரமாக நிறைவு!
திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச தையல் பயிற்சி முகாம் சமீபத்தில் சிறப்பாக நிறைவு பெற்றது. மாவட்ட மத்திய நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தையல் கலையை கற்றுக்கொண்டனர்.
கடந்த 15 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற்ற நிறைவு விழாவில், பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களும், தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.டி.என். எம்.ராஜன் பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களை வாழ்த்தினார்.
திருவண்ணாமலை ரோட்டரி கிளப் பேர்ல்ஸ், திருவண்ணாமலை மாவட்ட மத்திய நூலக பெண்கள் வாசகர் வட்டம் ஆகியோரும் இணைந்து இந்த பயிற்சி முகாமை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோட்டரி கிளப் தலைவர் ஆர்.டி.என். பி.திலகவதி, செயலாளர் ஆர்.டி.என். என்.ராஜலட்சுமி, பொருளாளர் ஆர்.டி.என். பி.பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நூலக அலுவலர் திருமதி. ப.வள்ளி, பெண்கள் வாசகர் வட்டத் தலைவி திருமதி. ஆர்த்தி மனோகரன், திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டு சங்கத் தலைவர் திரு. வெ.வெங்கடேசன், நிறுவன தலைவர் திரு. இராஜசேகர், இணை செயலாளர் திரு. பருசுராமன், துணைத்தலைவர் திரு. தனசேகரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த இலவச தையல் பயிற்சி முகாம், பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அவர்கள் சுயதொழில் தொடங்கவும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது என்று பயிற்சி பெற்றவர்கள் தெரிவித்தனர்.








திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டுச் சங்கம் நடத்தும் வணிகச் சுற்றுலா!
திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டுச்ங்கம் சமீபத்தில் ஒரு பயனுள்ள வணிகச் சுற்றுலாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 22-03-2025 முதல் 23-03-202 வரை நடைபெற்ற இந்தச் சுற்றுலாவில், தொழில் மற்றும் வணிகத்தில் ஆர்வமுள்ள பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டுச்ங்கத்தின் வணிகச் சுற்றுலாவின்போது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது வணிகம் மற்றும் சிறப்பு சலுகைகள் குறித்து கலந்துரையாடினர். மேலும், புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு விஜயம் செய்து, அந்த நிறுவனங்களின் செயல்பாட்டு முறைகள், அவர்கள் பின்பற்றும் வெற்றிகரமான உத்திகள் மற்றும் அவர்கள் சந்தித்த சவால்கள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர்.
இந்த அனுபவம், இளைஞர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை அடையாளம் காணவும், தொழில்முனைவுக்கான உத்வேகத்தைப் பெறவும் பெரிதும் உதவியது. பல்வேறு தொழில்களைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடியது மட்டுமல்லாமல், தங்களுக்குள் ஒரு நல்லுறவையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டுச்ங்கத்தின் இந்த முயற்சி, இளைஞர்களின் தொழில் மற்றும் வணிக அறிவை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கு நல்ல அனுபவத்தையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.




Pleasantview Gem Inn
Not just pleasant on the outside, our Pleasantview Gem Inn properties are especially popular among families. With underground parking and floor-to-ceiling windows, there's no shortage of natural light or space.
